இந்து மதத்தை பாதுகாக்க கிராமத்திற்கு ஒரு கோவில்!! -இந்தியாவில் புதிதாக 3,000 கோவில்களை கட்டுகிறது ஆந்திர அரசு-

ஆசிரியர் - Editor II
இந்து மதத்தை பாதுகாக்க கிராமத்திற்கு ஒரு கோவில்!! -இந்தியாவில் புதிதாக 3,000 கோவில்களை கட்டுகிறது ஆந்திர அரசு-

இந்தியாவில் இந்து மதத்தை பாதுகாக்கும் வகையில், புதிதாக 3,000 கோவில்களை ஆந்திர அரசு கட்டி வருகிறது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாநிலத் துணை முதல்வரும், இந்து அறநிலையத் துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்:-

முதல்வரின் உத்தரவின்படி, இந்து மதத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், இந்து மத நம்பிக்கைகளை பரப்பும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது.

கோவில்கள் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி அறக்கட்டளை, கோவில் ஒன்றுக்கு, 10 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறது. இதைத் தவிர, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கோவில்கள் கட்டும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, 1,330 கோவில்கள் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிதாக, 1,465 கோவில்கள் கட்டப்பட உள்ளன. எம்.எல்.ஏ,க்களின் கோரிக்கைகளை ஏற்று, 200க்கும் மேற்பட்ட கோவில்கள் என, மொத்தம், 3,000 புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்வோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு