SuperTopAds

சிறுமிக்கு தொந்தரவு!! சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனால் தாக்கப்பட்ட பிக்கு உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
சிறுமிக்கு தொந்தரவு!! சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனால் தாக்கப்பட்ட பிக்கு உயிரிழப்பு..

8 வயதான சிறுமியை தொந்தரவு செய்ததாக கூறி சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனால் தாக்கப்பட்ட 70 வயதான பௌத்த பிக்கு உயிரிழந்துள்ளார். 

ஹெட்டிபொல – அகாரஉட பகுதியைச் சேர்ந்த விகாரை ஒன்றின் பௌத்த பிக்குவே இவ்வாறு உயிரிழந்தார்.

விகாரையில் வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக பிரவேசித்த சிறுமி ஒருவரை குறித்த பௌத்த பிக்கு தொந்தரவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர், பௌத்த பிக்குவை தேடி சிறுமியின் தந்தையும் சகோதரனும் விகாரைக்கு சென்றனர். அவர் அங்கிருந்து தப்பி பிறிதொரு விகாரையில் தலைமறைவாகியிருந்தார். 

பின்னர் அங்கு இடத்திற்கு சென்ற சிறுமியின் தந்தையும் சகோதரனும் பௌத்த பிக்குவை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, பிரதேச மக்களின் அறிவித்தலுக்கமைய, நோயாளர் காவு வாகனம் மூலம் பௌத்த பிக்கு குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பௌத்த பிக்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார்.