போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!
போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அனுராதபுரம் நகரத்திலுள்ள தனியார் வங்கிக்கு அருகில் வைத்து சுமுார் 405 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றியவர் எனவும்,
நீதிபதி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பிரதேச போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகிறது.