இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது!! -படக்குழு அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்படாது!! -படக்குழு அறிவிப்பு-

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ள ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விவேக் நடித்துள்ள காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தற்போது இதனை படக்குழு மறுத்துள்ளதாகவும் நடிகர் விவேக் குரலில் பேசும் பல குரல் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் யார் விவேக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பார் என்ற அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு