SuperTopAds

பேருந்தில் பெண் ஒருவருடன் அநாகரிகமாக நடந்த பொலிஸ் அதிகாரியை நையப்புடைத்த பொதுமக்கள்!

ஆசிரியர் - Editor I
பேருந்தில் பெண் ஒருவருடன் அநாகரிகமாக நடந்த பொலிஸ் அதிகாரியை நையப்புடைத்த பொதுமக்கள்!

பேருந்தில் பெண் ஒருவருடன் அநாகரிகமாக நடந்துகொண்ட நிலையில் பொதுமக்களின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர் களுத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார். 

அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த பயிற்சி தாதி ஒருவர் அருகில் நின்றிருந்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும்,

இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள் ஆத்திரமடைந்து பரிசோதகரை தாக்கி பொலிஸில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.