15 வயது சிறுமியை கடத்தி, கட்டாய திருமணம் செய்த 60 வயது நபர்

ஆசிரியர் - Editor II
15 வயது சிறுமியை கடத்தி, கட்டாய திருமணம் செய்த 60 வயது நபர்

பாகிஸ்தானில் 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்திய, 60 வயது நபர் கட்டாய திருமணம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் 2 ஆவது மனைவியாக கட்டாய திருமணம் செய்து கொண்டார். 

அந்நாட்டில் பெரும்பான்மையாக முஸ்லிம் சமூகம் உள்ள சூழலில், அந்நாட்டில் சிறுபான்மை சமூக சிறுமிகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றி, அவர்களை முஸ்லிம் ஆடவர்கள் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பஞ்சாப் மாகாணத்தில் பைசாலாபாத் நகரில் அரச பாடசாலையில் முதல்வராக நைலா ஆம்பரீன் என்பவர் இருந்து வந்து உள்ளார். அந்த பெண்ணுக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் ஆரிப் கில். மாற்று திறனாளியான அவரால் தனது குடும்பத்தினரின் தேவைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

அவரது மகளான சிதாரா ஆரிப் என்ற சிறுமியை நைலா வேலைக்கு கேட்டு உள்ளார். பணதேவையாக இருந்த சூழலில், முஸ்லிம் பெண்ணிடம் வேலைக்கு அனுப்ப ஆரிப் கில் முடிவு செய்து உள்ளார்.

ஆனால், நைலாவின் 60 வயது கணவரான ராணா தய்யப், சிறுமியின் அழகை கவனித்து உள்ளார். அதனால் சிறுமியை 2 ஆவது மனைவியாக்குவது என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார். 

கடந்த டிசம்பர் 25 ஆம் திகதியில் இருந்து சிதாரா ஆரிப் வீட்டுக்கு திரும்பவில்லை. அதன்பின்னர், சிறுமி மதம் மாறி ராணா தய்யப்பை திருமணம் செய்த அதிர்ச்சி விவரங்கள் அவரது பெற்றோருக்கு தெரிய வந்து உள்ளது. 

அவரை காணாத பெற்றோர், அதுபற்றி விசாரணை செய்யும்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். ஆனால், பொலிஸார் அதனை கண்டுகொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு மிரட்டல் வந்து உள்ளது. 

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவரான பிரபல சட்டத்தரணியுமான அக்மல் பாட்டியை சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு உள்ளனர். 

இதன்பின், 2 மாதங்கள் கழித்து பொலிஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். விசாரணை நடத்துவோம் என உறுதியும் அளித்தனர். அக்மல் பாட்டியின் தலையீட்டுக்கு பின்னர், பொலிஸார் நைலா ஆம்பரீன் வீட்டுக்கு சென்று உள்ளனர். ஆனால் வீட்டில் நைலாவின் கணவரோ, சிதாராவோ இல்லை. ராணா தய்யப், சிதாராவை 2 ஆவது மனைவியாக கொண்டு சென்று விட்டார் என உறுதிப்படுத்தி, அதற்கான இஸ்லாமிய திருமண சான்றிதழை பொலிஸாரிடம் ராணாவின் மனைவியான நைலா காட்டியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு