யூ.டி.யூப் தளத்தின் புதிய அப்டேட்!! -இனி நமக்கு பிடித்த இசை ஆல்பத்தை நாமே உருவாக்கலாம்-

ஆசிரியர் - Editor II
யூ.டி.யூப் தளத்தின் புதிய அப்டேட்!! -இனி நமக்கு பிடித்த இசை ஆல்பத்தை நாமே உருவாக்கலாம்-

இனி Youtube Music செயலியில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த இசை கலைஞர்களை தேரிவு செய்து புதிய ஆல்பத்தை உருவாக்கி கொள்ளலாம் என்ற புத்தம் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

யூ.டி.யூப் தளத்தில் பொதுவாக எல்லா வகையான வீடியோக்களையும் காண முடியும். அதன் பின் இசைக்கு மட்டுமே பிரத்யேகமாக யூ.டி.யூப் மீயூசிக் என்ற ஒரு செயலியை ஆரம்பித்துள்ளது. அதில் நாம் விரும்பிய இசைகளை கேட்குமாறு வசதி உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போது புதிதாக யூ.டி.யூப் மீயூசிக்கில் பயனாளிகள் தங்களுக்கு பிடித்த 30ற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை தேர்வு செய்து அவர்களது பாடல்கள் மற்றும் இசையை நமது சுய ஆல்பமாக மாற்றி விரும்பும் போது கேட்டுக்கொள்ளலாம் எனும் வசதியை உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டில் உள்ள யூ.டி.யூப் மியூசிக் செயலியில் "Your music tuner" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நமக்கு பிடித்தமான இசைக்கலைஞர்களை தேர்வு செய்து அவர்களது பாடல்களை கேட்கலாம்.

மேலும், பயனர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்கள், இதுவரை கேட்டிராத பாடல்கள் அல்லது இரண்டினையும் சேர்த்து, எடிட்டிங் செய்து ​​பயனர்கள் கலவையை டியூன் செய்து கேட்கலாம்.

இது பற்றி கூகுள் செய்தித் தொடர்பாளர் பால் பென்னிங்டனின் கூறியதாவது:-

இந்த செயலியை சாந்த செலுத்தாதவர்களும் பயன்படுத்தலாம் என்கிறார். இந்த மாத இறுதியில் இந்த புதிய அப்டேட் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு