QR குறியீட்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது! மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

ஆசிரியர் - Editor I
QR குறியீட்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது! மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் QR குறியீட்டு நடைமுறையானது இன்னும் 3அல்லது 4 மாதங்களில் இரத்துச் செய்யப்படும்.

சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், சீரான எரிபொருள் விநியோகத்துக்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.  

நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு மின்சார தட்டுப்பாடோ அல்லது எரிபொருள் தட்டுப்பாடோ ஏற்படாது என உறுதிப்படுத்த முடியும். 

என தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர, QR குறியீடுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எரிபொருளை வழங்குவது மூன்று மாதங்களுக்குள் இடைநிறுத்தப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் மின்சாரத்தை வழங்குவதற்கான நிலக்கரியை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 

நிலக்கரி கப்பல்களுக்கான நிதியும் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு