சீதனமாக பழைய மரக்கட்டில் கொடுத்த மணமகள் குடும்பம்!! -திருமணத்தை நிறுத்திய மணமகன்-

ஆசிரியர் - Editor II
சீதனமாக பழைய மரக்கட்டில் கொடுத்த மணமகள் குடும்பம்!! -திருமணத்தை நிறுத்திய மணமகன்-

திருமணத்திற்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாக 'பழைய' மரச்சாமான்கள் கொடுத்ததற்காக மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெப்ரவரி 20 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின், மணமகன் குடும்பத்தினர் திடீரென திருமணத்தை நிறுத்தியதாக மணமகளின் தந்தை குற்றம் சாட்டினார்.

திருமண மணடபத்திற்கு வரத் தவறிய மணமகன் வீட்டாரிடம் விசாரிக்க சென்றபோது, ​​மணமகனின் தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மணமகளின் தந்தை பின் பொலிஸாரை அணுகி முறைப்பாடு செய்தனர். இதையடுத்து, மணமகன் விட்டார் மீது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டம் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மௌலாலியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் 25 வயதான முகமது ஜகாரியா (வயது 25), ஹீனா பாத்திமா (வயது 22) என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, அவர்களது திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது.

திருமணத்திற்கு முன்பு மணமகளின் பெற்றோர் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் ஜகாரியா திருமண இடத்திற்கு வரவில்லை. மணமகன் வீட்டிற்குச் சென்று தாமதம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, ​​வரதட்சணை குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும், அவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் மணமகளின் தந்தை குற்றம் சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணமகளின் தந்தை, “இன்று எனது மகளின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தேன், ஆனால் மாப்பிள்ளை வரவில்லை. 

நான் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது, ​​அவரது தந்தை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவரது குடும்பத்தினர் சில வரதட்சணைப் பொருட்களைக் கோரினர் மற்றும் நாங்கள் வழங்கிய பொருட்களை அவர்கள் விரும்பவில்லை என்று கூறினர்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 406 (நம்பிக்கை மீறலுக்கான தண்டனை) மற்றும் 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து வழங்குதல்) மற்றும் வரதட்சணை தடைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு