உள்ளூராட்சி தேர்தலை நடத்து! நாடாளுமன்றத்திற்குள் எதிர்கட்சிகள் போர்க்கொடி...
உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கோரி நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்தக்கோரி ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்களும் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்தே பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.