SuperTopAds

துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் வீட்டை பகிர்ந்து உதவும் இலங்கை தமிழ் பெண்

ஆசிரியர் - Editor II
துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் வீட்டை பகிர்ந்து உதவும் இலங்கை தமிழ் பெண்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை பெண் ஒருவர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இதுவரை 45,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அத்துடன் 200க்கும் குறைவான இடங்களில் மனிதர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் துருக்கியின் அங்காராவில் வசித்து வரும் தில்ஹானி சந்திரகுமார் என்ற இலங்கை பெண் ஒருவர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

தில்ஹானி சந்திரகுமார் இதற்காக அவரது இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு வழங்கியுள்ளார். இங்கு தற்போது 6 குடும்பங்கள் வரை தங்கியுள்ளனர்.