SuperTopAds

தாய் மாமன் செலுத்திய காரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்!

ஆசிரியர் - Editor I
தாய் மாமன் செலுத்திய காரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்!

தாய் மாமன் செலுத்திய காரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் களுபோவில - ரூபன் பீரிஸ்மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது. 

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருப்ப முயற்சித்த போது குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. காரை செலுத்திய நபரின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என்றும் , இவ்வாறு காரை செலுத்தியவர் உயிரிழந்த குழந்தையின் மாமா என்றும் 

பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.