வடமாகாண ஆளுநரை சந்தித்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை!
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாகாண தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்கள்
மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மறுவாழ்வாளிப்பது தொடர்பில் ஆளுநருக்கு அதிகாரிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.