மரத்தின் பின் மறைந்திருந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி, கொலையாளி தப்பினான்!
மினுவாங்கொடை - ருவன் மாவத்தை சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரபல போதைப் பொருள் வியாபாரி “சந்து” கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆடியம்பலம் – பீல்லவத்தை பகுதியைச் சேர்ந்த, சந்து எனப்படும் ப்ரபாத் பிரியங்கர என்ற 30 வயதான இளைஞரே இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிப் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.