SuperTopAds

காதலர் தினத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கிடையே மோதல்! பல்கலைகழக சொத்துக்கள் பல சேதம்...

ஆசிரியர் - Editor I
காதலர் தினத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கிடையே மோதல்! பல்கலைகழக சொத்துக்கள் பல சேதம்...

காதலர் தினத்தில் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் இரு பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையில் நடந்த மோதலில் பல்கலைகழக சொத்துக்கள் பல சோதமாக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த கலைப்பிரிவு மாணவர்களுக்கும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம்  இரவு 11 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதனையடுத்து மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தை கலைக்க நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.