SuperTopAds

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குசீட்டு அச்சிடும் பணிகள் நிறுத்தம்! பாரிய சதி என்கிறது தேர்தல் ஆணைக்குழு...

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குசீட்டு அச்சிடும் பணிகள் நிறுத்தம்! பாரிய சதி என்கிறது தேர்தல் ஆணைக்குழு...

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டு அச்சிடும் பணிகளை இனி மேற்கொள்ள முடியாது. என அரச அச்சக அதிகாரி கங்காணி லியனகே தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்துக்கு அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக குற்றம்சுமத்தினார்.

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதியை அச்சிட்டு தேர்தல் ஆணையகத்திற்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்த அரச அச்சக அதிகாரி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு 

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கான வாய்ப்பைப் பறிக்கும் பின்னணியை உருவாக்கினார் என குறித்த அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.