கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த இயான் மோர்கன்

ஆசிரியர் - Editor II
கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த இயான் மோர்கன்

அனைத்து வகையான துடுப்பாட்ட போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்துள்ளார். 

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் இயான் மோர்கன். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

இயன் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ஓட்டங்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7701 ஓட்டங்களும், 115 ரி-20 போட்டிகளில் விளையாடி 2458 ஓட்டங்களும், 83 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 2458 ஓட்டங்களும் எடுத்துள்ளார். 

இதனிடையே, இயன் மோர்கன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஊள்ளூர் போட்டிகள், ஏனைய லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், அனைத்து வகையிலான துடுப்பாட்ட போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயன் மோர்கன் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு