ஒரு கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது-விசாரணைகள் முன்னெடுப்பு
ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான இருவர் தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கடந்த சனிக்கிழமை (11) மாலை மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இரு வலம்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மட்டக்களப்பு சீனக்குடா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து 1 கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) அமரசேகர (67810) பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ் (90699) திலகரட்ன (90740) குமார ( 101082 ) வாகனச்சாரதி ஜெயரட்ன (19786) அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.