துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!
துருக்கி நில நடுக்கத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமையை இலங்கை துாதரகம் உறுதி செய்துள்ளது.
உயிரிழந்தவர் 64 வயதுடைய சந்திரிகா ராஜபக்க்ஷ எனவும், இவர் கலகெதரவை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகளே தனது தாயை அடையாளம் கண்டுள்ளார் எனவும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டபோதே
குறித்த பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. தூதரகத்தின் கூற்றுப்படி, அந்தப் பெண் துருக்கியில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்,
அவர் துருக்கிய பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.