தனது வீட்டில் மது விருந்து நடத்திய நபர் நண்பரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்!
மது விருந்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
சம்வத்தில் உயிரிழந்தவர் பெல்மதுல்ல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபராவார். இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில்,
கொலையுண்ட நபர் கடந்த 10ஆம் திகதி இரவு தனது வீட்டில் வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.