SuperTopAds

அவுஸ்திரேலியாவுக்கு மரண மாஸ் காட்டிய அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!! -அபர வெற்றி பெற்றது இந்தியா-

ஆசிரியர் - Editor II
அவுஸ்திரேலியாவுக்கு மரண மாஸ் காட்டிய அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!! -அபர வெற்றி பெற்றது இந்தியா-

அவுஸ்திரேலியவுக்கு எதிராக நாக்பூர் நடந்த டெஸ்டில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்துக்காட்டியுள்ளார்.

இந்தியா - அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களும், இந்தியா 400 ஓட்டங்களும் பெற்றன.

அதனைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா தனது 2 ஆவது இன்னிங்க்சை ஆரம்பித்தது.

இரண்டாவது பந்துப் பரிமாற்றத்திலேயே அவுஸ்திரேலியாவுக்கு அஸ்வின் அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் கவாஜா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து லபுசாக்னே 17 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வார்னரும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப், கேரி ஆகியோரும் அஸ்வின் பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.

இறுதியாக லயன் மற்றும் போலண்ட் விக்கெட்டுகளை ஷமி கைப்பற்ற, அவுஸ்திரேலிய அணி 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் மூன்று, இரண்டாவது இன்னிங்ஸில் 5 என அஸ்வின் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');