கட்டுப்பாடற்ற வேகம், இ.போ.ச பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! 28 பேர் காயம், அதில் 4 போின் நிலை கவலைக்கிடம்...
வேக கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அதில் 4 போின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
பயணிகளுடன் இரத்தினபுரி - சிறிபாகம வீதியில் பயணித்த இ.போ.ச பேருந்து நேற்று மாலை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.