SuperTopAds

இன்று யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..

ஆசிரியர் - Editor I
இன்று யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..

இந்தியாவினால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம கலாச்சார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக இன்று மாலை யாழிலுள்ள வர்த்தகர்கள் , கல்வியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தரப்பினரிடம் கேட்டறிந்து , 

அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார். மேலும் , நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை திறந்துவைக்கவுள்ளார். அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 

வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து விசேட வாகன பேரணியொன்றையும் ஏற்பாடு செய்துள்ளன. சனிக்கிழமை மாலை கலை கலாசார நிகழ்வுகளுடன் முற்றவெளி மைதானத்தில் மக்களுக்கான 

இந்திய பின்னணி பாடகர்கள் இருவரின் பங்குபற்றலுடன் இலவச இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 

நேற்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்த அமைச்சர் எல்.முருகன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார். நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , 

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் , ஏனைய பங்குதாரர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு அவர் வடக்கு மற்றும் கிழக்கில் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, இலங்கை - இந்திய கூட்டாண்மையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.