12 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 14 வயதான அயல்வீட்டுச் சிறுவன் கைது!
12 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 14 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹியங்கனை - ஒருபெந்திவெவ பகுதியை சேர்ந்த சிறுவனே கைத செய்யப்பட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அயலவர் எனவும், அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கனை பொலிஸாரால் 14 வயதுடைய சந்தேக நபரான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.