50 வயதான தாயும், 30 வயதான மகளும் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!
வீடொன்றின் படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கினிகத்தேன - பேரகஹமுல பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 50 வயதான தாயும், 30 வயதான மகளுமே சடலமாக மீட்க்கப்பட்டனர்.
வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு கூறியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது, தாயும் மகளும் சடலங்களாக கட்டிலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவனும் மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும்
உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.