அப்பிள் வாங்க முயற்சித்த பல்கலைகழக மாணவன் கைது..! தப்பி ஓடிய நண்பனும் கைது...
பழக்கடை ஒன்றில் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயதாளை பயன்படுத்தி அப்பிள் வாங்க முயற்சித்த பல்கலைகழக மாணவன் கைது செய்யப்பட்டள்ளதுடன், போலி நாணயதாள் மீட்கப்பட்டிருக்கின்றது.
24 வயதுடைய மாணவன் அவரின் 24 வயதுடைய நண்பனுடன் நேற்று பகல் அக்கரைப்பற்று கல்முனை வீதியிலுள்ள அப்பிள் கடைக்கு சென்று ஆப்பிளை வாங்கிவிட்டு 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கடை உரிமையாளர் இது போலியான தாள் என்பதையறிந்து உடனடியாக பல்கலைக்கழக மாணவனை மடக்கிபிடித்து பொலிஸாரிம் ஒப்படைத்ததுள்ளார்.
எனினும் அவருடன் வந்த நண்பன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவரை பொலிஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனிடம் இருந்து மேலும் இரு 5 ஆயிரம் ரூபா போலி தாள்கள் உட்பட
மூன்று 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளதாகவும், இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.