அரசியலில் ஈடுபட அமெரிக்க குடியுரிமையை துறக்கத் தயார்!

ஆசிரியர் - Admin
அரசியலில் ஈடுபட அமெரிக்க குடியுரிமையை துறக்கத் தயார்!

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர், தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் சகல விடயங்களையும் அகற்ற தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

வன்முறையான அரசியலை நாட்டில் இருந்து இல்லாதொழிக்கக்கூடிய ஒரே நபர் ரணில் விக்ரமசிங்கவே என கூறிய அவர், எரிவாயு, எரிபொருள் வரிசைகள், மின்சார துண்டிப்பு போன்றவற்றுக்கு அவரால் தீர்வுகளை வழங்க முடிந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், சரியான நபரையே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாக அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு