SuperTopAds

நீதிமன்ற வழக்கு அறையிலிருந்த 68 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை காணவில்லை! நீதிமன்ற ஊழியர் கைது..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற வழக்கு அறையிலிருந்த 68 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை காணவில்லை! நீதிமன்ற ஊழியர் கைது..

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் வழக்கு அறையிலிருந்த சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கம் காணாமல்போன சம்பவம தொடர்பில் அந்த அறையின் பாதுகாவலராக இருந்த நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் குறித்த ஊழியர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்குப் பொருட்கள் காணாமல்போனபோது இந்த சந்தேக நபர் வழக்குப் பொருட்கள் அறையின் பாதுகாவலராக கடமையாற்றியதாக 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.