SuperTopAds

உயர்கல்வியை கற்பதற்கு தேவையான பணத்தை பெறுவதற்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பெண்கள் கைது!

ஆசிரியர் - Editor I
உயர்கல்வியை கற்பதற்கு தேவையான பணத்தை பெறுவதற்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பெண்கள் கைது!

உயர்கல்வி கற்பதற்கு தேவையான பயணத்தை பெறுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 18 பெண்கள் தலங்காமவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதயகுமாரவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

4 இடங்களில் சோதனை செய்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணைகளில், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிப்பதற்கு இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகளாவர்.