SuperTopAds

பிரதி பொலிஸ்மா அதிபரின் வீட்டுக்குள் நுழைந்து 17 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! 19 வயது சந்தேகநபர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
பிரதி பொலிஸ்மா அதிபரின் வீட்டுக்குள் நுழைந்து 17 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! 19 வயது சந்தேகநபர் சிக்கினார்..

ஓய்வுநிலை பிரதி பொலிஸ்மா அதிபரின் வீட்டுக்குள் நுழைந்து சுமார் 17 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் லுகொடவின் இல்லத்தில் இநத கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

​​திருடப்பட்ட தங்க நகைகள் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு அனைத்தும் உருக்கப்பட்டிருதமை கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வீட்டார் வெளியே சென்றிருந்தபோது கொள்ளை இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலங்கம, மிரிஹான மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் 

தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.