பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற காரை மோதி தள்ளிய ரயில்! கார் சாரதி பலி..
காலி - மாத்தறை பிரதான வீதியில் விஜய் மாவத்தை பகுதியில் புகைரத கடவையை கடக்க முயற்சித்த கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சம்பவத்தில் படுகாயமடைந்த கார் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய உடகொதர, கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.