12 வயது சிறுமியை 8 நாட்கள் பூஜை அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்! இலங்கையில் நடந்த சம்பவம், சாமியார் தலைமறைவு...
8 நாட்கள் பூஜை செய்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என கூறி 12 வயதான சிறுமியை 8 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் காலி - ஓபாத பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டதாவது,
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்..
தனது 12 வயது மகளுக்கு கடவுளின் ஆசி வழங்குவதற்காக சிறுமியின் தந்தை தமது வீட்டுக்கு மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்துள்ளார். இதன்போது குறித்த மந்திரவாதி 8 நாட்களுக்கு பூஜை செய்தால் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியை 8 நாட்களும் அந்த மந்திரவாதி வீட்டின் அறை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.