கோடிகளை வாரிக்குவிக்கும் தளபதியின் வாரிசு!! -அறிவித்தது படக்குழு-

ஆசிரியர் - Editor II
கோடிகளை வாரிக்குவிக்கும் தளபதியின் வாரிசு!! -அறிவித்தது படக்குழு-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' படத்தின் வசூல் விபரங்களை படக்குழு அறிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11 ஆம் திகதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'வாரிசு' படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், வாரிசு படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு