இறுதி வரை தனிமையாக இருந்து மறைந்த வாணி ஜெயராம்!! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆசிரியர் - Editor II
இறுதி வரை தனிமையாக இருந்து மறைந்த வாணி ஜெயராம்!! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சில தினங்களுக்கு முன் உயிரிழந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம். 78 வயதான வாணி ஜெயராம் நேற்று முன் தினம் தனது வீட்டில் இறந்து கிடந்தார். வாணி ஜெயராம் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கீழே விழுந்ததில் பலமாக தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் எனவும் மரணத்தில் சந்தேகம் இல்லை எனவும் உறுதியானது.

மறைந்த வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் 2018 இல் காலமான நிலையில் அதன்பின்னர் தனியாகவே வாணி வசித்து வந்தார். ஏனெனில் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

வாணி தமிழ் மட்டுமின்றி, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார். வாணி ஜெயராமின் சொத்து மதிப்பு $1 மில்லியன் என தகவல்கள் கூறுகின்றன

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு