போதைப் பொருள் திருடியதாக கூறி 24 வயதான இளைஞனை தொடர்மாடி குடியிருப்பில் வைத்து அடித்துக் கொலைசெய்த கும்பல்...
போதைப் பொருளை திருடியதாக உருவான தகராறு காரணமாக 24 வயதான இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனை மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று,
அங்குவைத்து மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 24 வயதான குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.