தனது பிள்ளைகளை கொலை செய்த தந்தை தானும் உயிரை மாய்ப்பு!
தன்னுடைய இரு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் அரநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.
33 வயது நபர் தனது பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக தந்தை இரண்டு மற்றும் ஏழு வயது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.