சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமையில் சுதந்திர தின நிகழ்வு
முஸ்லிம் மரபுரிமைகள் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எழுபத்து ஐந்தாவது சுதந்திரதினம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமையில் நிந்தவூர் ஸாலிமிய்யா நல்லிணக்க மையத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் செயலாளர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸீஸ் நெறிப்டுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிராந்திய பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம் ரயீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து தேசியக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் கௌரவ அதிதியாக கலந்து இலங்கை முஸ்லிம்களின் மரபுகளை பாதுகாப்பதன் மூலம் சமூகத்தின் இருப்பை தக்கவைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா உரையாற்றுகையில்
இலங்கைக்கான சுதந்திரத்தை உள்ளக சமூக முரண்பாடுகள் தாமதப்படுத்தும் களநிலையினை தீர்க்கமாக உணர்ந்த டாக்டர் ரி.பி.ஜாயா அவர்கள் பிரித்தானியர்களிடம் இருந்து நிபந்தனையற்ற சுதந்திரத்தைக் கோர வேண்டியதன் அவசியத்தை நாட்டின் தலை வர்களுக்கு தெளிவூட்டி நமது சுதந்திர தாகத்தை தணித்தார் என்ற வரலாற்று உண்மையினை நினைவுகூர்ந்தார்
எனவே நமது சுதந்திர தினத்தை கெண்டாடுவது நமக்கான பூரண உரிமை என்பதை வலியுறுத்தினார்
இந்நிகழ்வில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபிக் கல்லூரியின் அதிபர் ஹாமிம் ஸதகா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
இந்நிகழ்வினை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். முர்ஷித் JP மற்றும் நிறை வேற்றுக்குழு உறுப்பினர் ஏ. மன்சூர் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தார்கள்
மேலும் நிந்தவூர் கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த சாதாத்மார்கள் உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.