யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் அதிரடி! ஹொக்ஹைன் போதைப் பொருளுடன் வியாபாரி சிக்கினார்...
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 54 கிராம் ஹொக்ஹைன் போதைப் பொருளுடன் போதை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளான்.
மன்னாரைச் சேர்ந்த குறித்த வியாபாரி போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருத்தப்பட்ட நஞ்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கிராம் உயிர்க்கொல்லி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கான பிணை கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே விண்ணப்பிக்க முடியும்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய மாதங்களில் கைப்பற்றப்பட்ட அதிக பெறுமதியான போதைப்பொருளாக இது உள்ளதாக பொலிஸார் கூறினர்.