லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு..! விலை விபரமும் வெளியானது...

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு..! விலை விபரமும் வெளியானது...

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவாலும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது. 

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாய் ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1904 ரூபாய் ஆகவும் 

மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு