தொடர்ந்து வாந்தி எடுத்த 14 வயது சிறுமி!! -சத்திர சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
தொடர்ந்து வாந்தி எடுத்த 14 வயது சிறுமி!! -சத்திர சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி-

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

குறித்த மாநிலத்தின் குடிவாடா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தொடர் வாந்தி, வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்னைகளால் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு எண்டோஸ்கோபி மற்றும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், வயிற்றில் முடி இருப்பதையும், சிறுமிக்கு முடி உண்ணும் பழக்கம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அதிகப்படியான முடி அவரது வயிற்றில் ஒரு கட்டியைப் போல மாறியுள்ளது. மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடியை அகற்றினர்.

மருத்துவர் கூறுகையில்;- சிறுமி அனீமியாவால் பாதிக்கப்பட்டதால், முடி உண்ணும் விநோத பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். தொடர்ந்து முடியை உண்பதால், வயிற்றில் கட்டி உருவாகி இருக்கும் என கூறியுள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு