சடலமாக மீட்கப்பட்ட 51 வயது, 49 வயதுடைய சகோதரிகள்..! 90 வயதான தாய் வைத்தியசாலையில் அனுமதி..
சகோதரிகளான இரு பெண்கள் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 90 வயதான அவர்களின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தெரணியாகல பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. 51 வயது மற்றும் 49 வயதான இரு பெண்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.