இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் வடமாகாணத்திற்கான பிரதான நிகழ்வு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் வடமாகாணத்திற்கான பிரதான நிகழ்வு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில்..

இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வடமாகாணத்தில் - யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. 

வடமாகாண ஆளுநர் செயலகமும் 51 வது படைப்பிரிவும் இணைந்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. 

சுதந்திர தின அணிவகுப்பில் கவர்ச்சியை சேர்க்க பாடசாலை கெடேட் பிளாட்டூன்கள், சாரணர் குழுக்கள், பாடசாலை இசைக்குழுக்கள் 

மற்றும் கலாச்சார நடனக் குழுக்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளன, பாதுகாப்புப் படையினரின் (யாழ்ப்பாணம்) மேற்பார்வையின் கீழ் 

55 வது காலாட்படை பிரிவின் 551 காலாட்படை படைப்பிரிவின் ஏற்பாட்டில் மற்றொரு சுதந்திர தின விழா பருத்தித்துறை நெல்லியடி காலின்ஸ் மைதானத்தில் இடம்பெறும். 

இந்நிகழ்வில் 350 சிறுவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வை ஒட்டி நெல்லியட்டி பிரதேசத்தில் வைத்திய முகாம், 

ல் வைத்திய முகாம், மூக்கு கண்ணாடி விநியோகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதிகள் விநியோகம், தென்னை மரக்கன்றுகள் 

மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநியோகம் என்பன நடைபெறவுள்ளது.மேலும், 55 காலாட்படை பிரிவு பகுதியில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணக் கோட்டையில் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு