தேர்தல் பிரச்சாரத்தில் புகைப்படம்!! -நம்பாதீர்கள் என்கிறார் தசுன் சானக்க-

ஆசிரியர் - Editor II
தேர்தல் பிரச்சாரத்தில் புகைப்படம்!! -நம்பாதீர்கள் என்கிறார் தசுன் சானக்க-

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களுக்காக தனது புகைபடம் ஆங்காங்கே பயன்படுத்தப்படுவதனை, தான் அறிந்திருப்பதாக தசுன் சானக்க டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும், தாம் எந்தவொரு கட்சியினதும் உறுப்பினராக செயற்பட்டதில்லை எனவும் தசுன் சானக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாய் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதே தனது உண்மையான ஆர்வம் என அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு