யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை அழிக்க யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இடம்! இன்று பேச்சுவார்த்தை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை அழிக்க யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இடம்! இன்று பேச்சுவார்த்தை..

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை சீராக அழிப்பது தொடர்பாக யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இடம் ஒன்றை தொிவு செய்வது தொடர்பாக மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

குறிப்பாக வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படுகின்றன எனினும் யாழ்.போதனா வைத்திய சாலையானது குடாநாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் 

அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன. எனவே அந்த கழிவுகளை யாழ்.மாநகரத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்தில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அழிப்பதற்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்வது தொடர்பில் 

இன்றைய தினம் ஆராயப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு