கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு- அம்பாறை டி.ஐ.ஜி ஆராய்வு

ஆசிரியர் - Editor III
கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு- அம்பாறை டி.ஐ.ஜி ஆராய்வு

கல்முனை தலைமையக பொலிஸ்  பொலிஸ் நிலையத்திற்கு  அம்பாறை மாவட்ட  பிரதிப்பொலிஸ் மா அதிபர்  விஜயம் செய்துள்ளார்.

இன்று (31) குறித்த பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த    அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்   தமயந்த விஜய சிறி கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில்   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட  அப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான   அணிவகுப்பு  மரியாதையும் பரிசோதனையும் கலந்து கொண்டு   பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

 கல்முனை தலைமைய  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர்  புத்திக  இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில்  சேவையினை பாராட்டி   நினைவு சின்னம் ஒன்றினை  வழங்கி வைத்தார்.

கல்முனை மாநகர பிரதேசத்தை பசுமைத் திட்டங்களின் கீழ் உள்வாங்குவதன் அவசியம் மற்றும் பசுமை தரும் மரங்களை நடுவதன் ஊடாக மக்களுக்கான நன்மைகள் தொடர்பில்  வலியுறுத்திய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இளைஞர் சேவை அதிகாரிகள் உட்பட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின்  ஆலோசனைகளை பெற்று   கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில்  இணைந்து மேற்குறித்த நிகழ்வின் முன்னாயத்த விடயங்களை ஆராய்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினர்.

இப்பசுமைத் திட்டங்களின் கீழ் மாநகர சபை உள்ளிட்ட பல தரப்பினரை உள்வாங்கி   பாதைகளின் நடுவில்  மரங்களை நாட்டுதல் அவற்றை பேணுதல் ஆடு மாடுகள் தீண்டுவதில் இருந்து பாதுகாத்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக்,  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகள்    உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள்  பலரும் கலந்து கொண்டனர் .

குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது பொலிஸாரின் நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான முன்னெடுப்பு களப்பரிசோதனைகள் ஆகியவற்றுடன்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு ,  சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு ,போக்குவரத்து பிரிவு , சிறு குற்றத்தடுப்பு பிரிவு  ,பெருங் குற்றத்தடுப்பு பிரிவு  ,சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு, உள்ளிட்ட பல பிரிவுகள் தொடர்பான குறைநிறைகள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு