SuperTopAds

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான வசந்த முதலிகே விடுதலை! பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு...

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான வசந்த முதலிகே விடுதலை! பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த பல்கலைகழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகேவை தடுத்துவைக்க போதிய ஆதாரங்கள் என சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். 

இந்நிலையில் வசந்த முதலிகேவை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதேவேளை இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்திற்கு தடையுத்தரவு வழங்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ளது.