ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீதான வழக்கு 28ம் திகதி தவணையிடப்பட்டது!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீதான வழக்கு 28ம் திகதி தவணையிடப்பட்டது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்று யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் வழக்கு விசாரணை 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த பல்கலைகழக மாணவன் மறறும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க செயலாளர் உள்ளிட்ட இருவரும் 

தலா 1 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான வழக்கும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சார்பில் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு