வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் வி.ஜி.பி குழுமம் யாழ்ப்பாணத்தில் ஆய்வு..
வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலன உயர்மட்ட குழு யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது.
யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் வடமாகாணத்தில் எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம்? அதற்கான சாதக/ பாதகங்கள் குறித்து பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது.
சந்திப்பில் யாழ்.இந்திய துணை தூதரகத்தின் தூதுவர் ராஜேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.வாகீசன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோரும் இந்திய தரப்பில்,
வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையில்
நீதியரசர் டிஎன் வள்ளிநாயகம், பேராசிரியர் உலகநாயகி பழனி, பேராசிரியர் திலகவதி, பேராசிரியர் புவனேஸ்வரி, வழக்கறிஞர் அப்துல் கனி, திருமதி கலைவாணி, திருமதி சரண்யா, திரு பீட்டர், முனைவர் பட்ட ஆய்வாளர் நாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.