புலிகளின்குரல் வானொலியின் பொறுப்பாளரும், மூத்த போராளியுமான ஐவானின் தந்தை அமரத்துவமடைந்தார்..
புலிகளின்குரல் வானொலியின் பொறுப்பாளரும், மூத்த போராளியுமான தமிழன்பன் (ஐவான்) உடைய தந்தை கந்தையா நாகரத்தினம் 29.01.2023 அன்று இயற்கை மரணம் அடைந்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை 2 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த நாகரத்தினம் அவர்கள்விடுதலைப்போராட்டத்திற்காக தனது பிள்ளைகளில் 2 பிள்ளைகளை மாவீராக கொடுத்துள்ளார்.
புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளரகவும் இறுதி யுத்தத்தில் காணாமல் போன ஜவான் அல்லது தமிழன்பன் மற்றும் ஒரு மகனை போராளியாகவும் நாட்டிற்கு அர்பணிபத்த தந்தை
முல்லைத்தீவு – முள்ளியவளையில் வசித்து வந்த நிலையில் இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவர் சிறு வயதிலிருந்து முள்ளியவளை கட்டுவிநாயகர் கோவிலுக்கு சிறந்த தொண்டனாகவும் பக்தனாகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தியாகி திலீபன் மருத்துவமனை மருத்துவர் வண்ணன் மற்றும் மாவீரர் பரணி ஆகியோரினது தந்தையுமாவார்.