SuperTopAds

தன் மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தாய்! யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி...

ஆசிரியர் - Editor I
தன் மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தாய்! யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி...

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதான சிறுமிக்கு அவருடைய தாய் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்குஅவருடைய தாயார் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்.போதனா வைத்திய சாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடு கடந்த 18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சத்திர சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தினையும்இ குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய குழாமினுடைய புகைப் படத்தினையும் வைத்திய கலாநிதியும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான தங்கமுத்து சத்தியமூர்த்தி வெளியிட்டார்